யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஆசிரியர்கள் நேற்று (23) பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்.
பாடசாலை நேரத்தில் அத்துமீறி உள்நுழைந்த மாணவன் ஒருவரின் தந்தை ஆசிரியரை தாக்கியமை தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்றும் தாக்கிய நபர் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்து ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டனர்.
இதன்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
ஆசிரியரை தாக்கிய பெற்றோர் கைது செய்யப்படவில்லை என்றால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்றை ஏற்படுத்த உள்ளதாகவும் குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதன் போது குறிப்பிட்டார்.