மொனராகலையில் மூன்று மாணவிகள் பாடசாலை செல்வதாக கூறி பாடசாலை செல்லாது வீடு திரும்பி உள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெதிகும்பர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவிகளே இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்குச் செல்வதாக வீட்டிலிருந்து சென்ற மாணவிகள் மூவர் பாடசாலைக்குச் செல்லாது அன்றையதினம் பிற்பகல் இரண்டரை மணியளவில் வீடு திரும்பி உள்ளனர்.
இதுதொடர்பில் பெற்றோர் விசாரித்த போதே இம் மூன்று மாணவிகளும் காதலர்களால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளது.
கடந்த 12ஆம் திகதி சென்றிருந்த அந்த மூன்று ஜோடிகளில் இரண்டு காதலிகள் கடும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் மற்றைய காதலி துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று மொனராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என கிடைத்த தகவல்களின் பிரகாரம் தேடிபார்த்தபோது அந்த மூவரும் மோட்டார் சைக்கிள்களில் சென்றமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த மாணவிகளின் காதலர்கள் மூவரும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூக்கிரி எல்லையை பார்வையிட அன்று காலையில் சென்றுள்ளனர். அதன்பின்னர் அருகிலிருக்கும் காட்டுக்குள் அழைத்துச் சென்று காதலிகளை காதலர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாணவி ஒருவரின் தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு அம் மாணவிகள் மூவரும் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் காதலர்கள் மூவரும் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.