மகாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதியம், பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஒரு புதிய தகவல் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாபொல நிதியத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான விஜித் மலகொட இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த அமைப்பு மகாபொல உதவித்தொகை நிதி விநியோகம் தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மகாபொல இணையத்தளம் மூலம் கிடைக்கும்
இந்த புதிய அமைப்பு, இந்த மாதம் முதல் www.mahapola.lk என்ற அதிகாரப்பூர்வ மகாபொல இணையத்தளத்தின் மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கும் என சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் குறித்த அமைப்பு, மாணவர்கள் தங்களின் உதவித்தொகை கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான விபரங்களை எளிதாகப் பெறுவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

