இலங்கை வீதிகளில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட அதிக திறன் வாய்ந்த 1.2 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தில் இருந்து மேல் மாகாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 100 மோட்டார் சைக்கிள்கள் கொண்ட பேரணியில் இந்த மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுளளது.
அந்த மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்கள் இருவர் நேற்று இரவு அந்த மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி – கொழும்பு பிரதான வீதியின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பேரணி, மேல் மாகாணம் வரை பயணித்துக் கொண்டிருந்த போது அழுத்கம நகர போக்குவரத்து பொலிஸ் குழுவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதன் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.