திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிர்வாகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு எதிராக சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீட்டு நீதிபதியான நீதியரசர் பிரேம் சங்கர், நீதியரசர் ராமக்கமலன் ஆகியோர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக தீர்ப்பளித்து மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்கள்.
திருக்கோணேஸ்வர ஆலயத்தின் பரிபாலன சபை வழக்கிற்கு முக்கிய சான்றாக இருக்கக்கூடிய, இரா.கெங்காதரன் மாதச் சம்பளம் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையில் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆவணங்களையும் தொடர்புடைய பொதுவான ஏடுகள், கணக்கேடுகள், உறுதிச்சீட்டுக்கள் பற்றுச்சீட்டுக்கள் உட்பட உரிய ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு துஷ்யந்தன் (முன்னாள் தலைவர் )அருண் ,விஜயகுமார் ஆகியோருக்கு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கட்டளையிட்டுள்ளார்.
அத்துடன் திருக்கோணேஸ்வர ஆலயத்தில் செயல்படுகின்ற பரிபாலன சபை காரியாலயத்தின் பாதுகாப்புக்காக ஆலயத்திற்கு மிக அருகாமையில் இரண்டு தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பு கடமைக்கு நிறுத்துமாறும் துறைமுக பொலிசாருக்கும் திருகோணமலை தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சிரேஷ்ட சட்டத்தரணி திருக்குமரநாதன் அவர்கள் தமது வாத திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் சட்டத்தரணி துஷ்யந்தனின் சட்டத்துறை ஒழுங்கு நெறிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் YouTube மூலமாக தவறான விடயங்களை கூறியது குறித்து குற்றப்புலனாய்வு துறையினரிடம் மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் அவருடைய சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை, நீதித்துறை உயர்பீடங்களுக்கும் முறைப்பாடு செய்துள்ளதுடன் துஷ்யந்தன்க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருக்கோணேச்சர ஆலயநிருவாக சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் நீதிமன்றக் கட்டாணை இன்று சமர்ப்பிக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் தரப்பில் இருந்து தெரியவருகின்றது.
சட்டத்தரணி துஷ்யந்தன் சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார் மற்றும் அவரது கணவர் ஆகியோரின் சட்டவிரோத செயற்பாடுகள் சட்டத்துறை மற்றும் நிநீதித்துறை உயர்பீடங்களுக்கும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா,மேல் நீதிமன்ற நீதிபதி பிரேம் சங்கர், நீதிவான் பயாஸ் , மேலதிக நீதவான் ஜீவராணி ஆகியோருக்கும் அறிக்கையிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சட்டத்தரணி ஐஸ்வர்யா, சட்டத்தரணி துஷ்யந்தன் ஆகியோர் உயர்நீதிமன்றம் ஒழுக்க விதிகளை மீறி உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற திருக்கோணேசர் நகர்வலம் நிறைவும் வரை (14.03.2024) எந்தத் நீதிமன்றச் செயற்பாடுகளையும் செய்வதில்லை என்பதை திருகோணமலையின் சமயத்தலைவர்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இன்றைய நாள் 15.03. 2024 கட்டாணை அனைவருக்கும் சமர்ப்பிக்கப்பட்டது.
அதேவேளை ஏற்கனவே நீதின்றினால் வழங்கப்பட்ட கட்டாணை , கிடைக்கவில்லை கிடைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு ஒரு ஆட்சேபனை வழக்கையும், ஒரு மேன்முறையீட்டு வழக்கையும் நிருவாகசபை பதிவுசெய்ததுடன் இரண்டியும் தோல்வி கண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.