பன்றி பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகளுக்கு நிபா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை பரிசோதிக்கும் பணி நாளை (27) ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இதனால் நாளை முதல் பண்ணைகளில் உள்ள பன்றிகளின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றை பரிசோதிக்கும் பணியை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கால்நடைத்துறை அதிகாரிகளின் ஆதரவை பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பன்றிப் பண்ணைகள் பெரும்பாலும் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ளதால் அந்தப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பன்றிக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அது பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.