மொனராகலையில் 15 வயதுடைய மாணவி ஒருவர் தன் உயிரை மாய்த்து உயிரிழந்து உள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (17) பாடசாலை சென்று வீடு திரும்பிய குறித்த மாணவி உயிரிழந்த நிலையில் தனது அறையில் கிடந்ததை அவருடைய தந்தையார் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாணவியின் மரணம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்