நாடாளும்னற சபை நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியினர் புறக்கணித்துவருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிப்போகும் என்கிற அச்சத்தால், சபை நடவடிக்கைகளில் சஜித் பிரேமதாஸ விரைவில் கலந்துகொள்வார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இன்றையஅமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜோன்ஸ்டன் இதனை தெரிவித்தார்.
அத்துடன் , ஐக்கிய மக்கள் சக்தி சபை நடவடிக்கைகளை புறக்கணித்துள்ள நிலையில், சபைக்கு ரணில் வந்திருப்பதால் அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மிகுந்த அச்சத்தில் உள்ளதாக அக்கட்சியின் எம்.பி ஒருவர் என்னிடம் தொலைபேசியில் கூறியதாகவு,ம் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிப்போகும் என்கிற அச்சத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, சபை நடவடிக்கைகளில் விரைவாக கலந்துகொள்வார் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.