இலங்கையில் சுமார் 14 இலட்சம் மாணவர்கள் பட்டினியில் வாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
பாடசாலை செல்லும் மாணவ மாணவியரில் மூன்றில் ஒரு பகுதியினர் முற்றிலும் உணவு இன்றி அல்லது போதியளவு உணவு உட்கொள்ளாது காலையில் பாடசாலை செல்வதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனைகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
காலை உணவு உட்கொள்ளாமை பிள்ளைகளின் மூளை வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் இருபது வீதமான சிறார்கள் மந்த போசனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியினால் இந்த நிலைம ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதற்கு பொருளாதார நெருக்கடி நிலைமையும் ஓர் ஏது என சுட்டிக்காட்டியுள்ளார்.
போசாக்கான உணவு வழங்குவதற்கு பெற்றோரினால் முடியாத நிலை உருவாகியுள்ளது எனவும், இதனால் பிள்ளைகளுக்கு பல்வேறு போசனை குறைபாடுகள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால சந்ததியினர் போசாக்கு குறைபாடுடைய சந்ததியாக உருவாவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.