எஹலியகொட, கெட்டஹெட்ட பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளான சம்பவம் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எஹலியகொடவில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் கொழும்பில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியதாக தெரியவந்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்து அவிஸ்ஸாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் யாருடைய நிலையும் கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.