இலங்கை சந்தையில் மீன்களின் விலை ஏனைய நாட்களை விட பெருமளவில் குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் பேலியகொடை மீன் சந்தையில் ஒரு கிலோ நெய் மீன் 2 ஆயிரம் ரூபாவுக்கும் ஒரு கிலோ சூரை மீன் 600 ரூபாவுக்கும் மற்றுமொரு வகை சூரை மீன் ஆயிரம் ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிலோ கிராம் பாறை மீன் ஆயிரத்து 500 ரூபாவுக்கும் ஒரு கிலோ கிராம் சாளை மீன் 350 ரூபாவுக்கும் ஒரு கிலோ கிராம் உருளை மீன் 750 ரூபாவுக்கும் ஒரு கிலோ கிராம் கானாங்கெளுத்தி மீன் 600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சாதாரண சந்தையிலும் மீன்களின் விலைகள் ஏனைய நாட்களுடன் ஒப்பிடும் போது விலை குறைந்து காணப்பட்டதாக நுகர்வோர் கூறியுள்ளனர்.
இதேவேளை, ஒரு கிலோ கோழி இறைச்சி இன்னும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் ஒரு கிலோ கிராம் 1450 முதல் 1600 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.