கொழும்பின் பல பகுதிகளில் நாளை (22) 14 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை இரவு 10 மணி முதல், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி வரை கொழும்பின் பல பகுதிகளுக்கு குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.