தங்காலை, மரகொல்லிய கடற்பரப்பில் நேற்று மாலை போலந்து பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 22 வயதுடைய பெண்ணும் அவரது காதலனும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து தங்காலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சடலம் தற்போது தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்காலை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.