கொத்மலை, வெதமுல்லவத்த பகுதியில் சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அந்த பகுதியில் உள்ள கேமில்டன் கால்வாயை கடக்க முயன்றபோது, நீரோட்டத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் பிரதேசவாசிகள் சிறுமியை மீட்டு நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெதமுல்லவத்த கெமில்டன் பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி தனது சகோதரியுடன் கால்வாயை கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.