நீதிமன்றத்துக்கு சாட்சி வழங்க வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று வெலிமடை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக கம்பளையில் இருந்து 62 வயதுடைய முதியவர் ஒருவர் வந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் முதியவர் வெலிமடை நீதிமன்ற உள்நுழையும் நுழைவாயில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து மயக்கமடைந்த முதியவரை வெலிமடை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்
. இந்நிலையில் முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.