நியூசிலாந்து நாட்டில் நீரில் மூழ்கி இலங்கை இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் 19 வயதான ஹிரன் ஜோசப் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நியூசிலாந்தின் ஒக்லாந்தில் உள்ள கரியோடாஹி கடற்கரையில் நண்பர்கள் குழுவுடன் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அலைகள் காரணமாக காணாமல் போன அவரது சடலம் சுமார் ஐந்து நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஹிரன் ஜோசப் சிறந்த நீச்சல் வீரர் என்றும் அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.