இந்திய எண்ணெய் நிறுவனம் தற்போது தனது விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதை 80 வீதமாகக் குறைத்துள்ளதாக தெரிவிகபப்டுகின்றது.
இத்தகவலை எண்ணெய் துறைமுகம் மற்றும் மின்சார தொழிற்சங்கங்களின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். இதன்படி, ஏற்கனவே எரிபொருள் வரிசையில் நிற்கும் மக்கள் மிகவும் நெருக்கடியான சூழலுக்கு ஆளாக நேரிடும் என்றார்.
இந்த நிலையில் தற்போதுள்ள மூன்று கிலோமீற்றர் எரிபொருள் வரிசை சுமார் ஏழு கிலோமீற்றர் நீளமாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை தொடர்ந்து 20 வருடங்கள் எரிபொருளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்த போதிலும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த இந்திய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.