யுத்தத்தில் இழப்புகளை சந்தித்தவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நினைவேந்தல்களை வீடுகளில் அனுஷ்டிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதை பொதிகள் வழங்கும் நிகழ்விற்கு வருகைதந்த இராஜங்க அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கும்பேது இதனை தெரிவித்தார்.
அதோடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், இழப்புகளை சந்தித்தவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு வீடுகளில் நினைவேந்தல்களை அனுஷ்டிக்க முடியும் எனவும் அவர்களுக்கு நாங்கள் இந்த இடத்திலே ஆறுதலை சொல்ல விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.