இலங்கையில் க.பொ. த சாதாரண தர பரீட்சைக்கு வசதியாக மே 22 மற்றும் மே 29 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படாது எனவும், அதனடிப்படையில் கடந்த மே 22 முதல் ஜூன் 01 வரை ஏனைய நாட்களில் மாலை 6.30 மணிக்கு மேல் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படாது எனவும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
குறித்த தினங்களில் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பரீட்சை நடைபெறாத அந்நாட்களில் கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு வர்த்தக நகர வலயம் தவிர்ந்த அனைத்து வலயங்களிலும் 1 மணித்தியாலம் 45 நிமிடம் முதல் 2 மணித்தியாலம் 10 நிமிடம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளை, கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் மு.ப. 8.00 மணி வரையிலும், கொழும்பு வர்த்தக நகர வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் மு.ப. 9 மணி வரையிலும் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை (30-05-2022) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO | XYZ | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், மு.ப. 6.00 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது;