செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு கொடுப்பனவுகளை பயனாளிகளின் வங்கிப் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, முதியோர் கொடுப்பனவு நாளைய தினம் (01) உரிய பயனாளர்களின் ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரிப் பயனாளர் சபை அறிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரிப் பயனாளர் கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் இரண்டு கட்டங்களாக இந்த நிதி விநியோகிக்கப்படவுள்ளது.
அஸ்வெசும வங்கிக் கணக்குகள்
70 வயதுக்கு மேற்பட்ட 616,755 முதியவர்களுக்காக 3,083.755 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டம்: 70 வயதுக்கு மேற்பட்ட 79,063 முதியவர்களுக்காக 395.315 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி இரண்டு கட்டங்களின் கீழும் மொத்தமாக 695,818 முதியவர்களுக்கு 3,479.07 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.
உரிய பயனாளர்கள் அக்டோபர் 1ஆம் திகதி முதல் தமது முதியோர் படியை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரிப் பயனாளர் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

