என் பொண்டாட்டிய தொடும் போதும், மஹிந்த மஹிந்த என்றே தொடுவேன். நான் ஒரு மஹிந்த பைத்தியம் என்று முன்பு நான் கூறி இருந்தேன்.
அந்த அளவுக்கு மஹிந்த நோய் காணப்பட்டது. இன்று இன்று அவ் நோய் குணமாகியுள்ளது என குலதிஸ்ஸ கீகனகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது வாரத்தில் 7 நாட்களுக்கு வரிசையில் நின்றும் ரூ. 3000 கூட பெற்றோல் இல்லை. ஆனால் இன்று ரணில் விக்கிரமசிங்க வந்தவுடன் QR மூலம் பெற்றோல் பெறலாம்.
மஹிந்த ராஜபக்ஷ வந்த போது 500/- உயர்ந்தது. ரணில் விக்கிரமசிங்க வந்ததால் பாணின் விலை இன்று 150/- குறைந்தது. இன்று பெற்றோல் வரிசை உள்ளதா? இல்லை. எங்கு வரிசை காணப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க சிறிய தலையா? ரணில் விக்கிரமசிங்கவினால்தான் இன்று என் மனைவியை பார்த்து கொள்ள முடிந்தது. 3 நாட்கள் எரிவாயு வரிசையில் நின்றேன். வரிசையில் நின்று சிலிண்டரை திருடிவிடுவார்கள் என்ற பயத்தில் எங்கள் ஊரில் உள்ள நபரை காவல் காக்க கூறினேன்.
ஒரு நாளிற்கு 1000/-என்ற ரீதியில் வழங்க இறுதியில் 7000/– வழங்கினேன். ஆனால் இன்று அவ் பிரச்சனை இல்லை. யாரால் தனி யானை கட்சி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் மட்டுமே.
தனிமனிதனாக செயற்பட்டு அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்தார். இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியாகவே அனைத்து முயற்சிகளையும் கையாண்டார். அங்கு மொட்டு கட்சியில் நுழைந்தது ரணில் விக்கிரமசிங்க இல்லை.
தனி யானை கட்சியாக முன் வந்தவர் ரணில் விக்கிரமசிங்க. ஆனால் இதை கவனித்த சஜித் பிரமதாச பயந்து, விமல் வீரவன்ச, உதயம் கம்மன்பில, டலஸ் அலகப்பெரும இனைந்து மொட்டு கட்சியுடன் இணைந்து செயற்பட்டார்.
முஸ்லிம் தலைவர்கள், தமிழ் தலைவர் அனைவரிற்கும் யானையின் பலம் அவசியம். எனவே ரணில் விக்கிரமசிங்க என்பவர் சிறிய தலை இல்லை. முன்பு நாங்கள் மஹிந்த ராஜபக்ஷ உடன் இருக்கும் போது ரணில் விக்கிரமசிங்க வந்தால் எங்களுடைய கால்கள் நடுங்கும்.
பெற்றோல் விலை குறைந்துள்ளது. டிசம்பர் மாத காலப் பகுதியில் மீண்டும் ஒரு பாணின் விலை 80/-ற்கு குறையும். பழைய படி நாடு மீண்டும் கட்டி எழுப்பபடும். அது ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே முடியும். என குலதிஸ்ஸ கீகனகே தெரிவித்துள்ளார்.