ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டத்துக்கு தெரிவாகும் அணியை தெரிவு செய்வதற்கான போட்டி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியே இன்று (14) நடைபெறவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாணய சுழற்சியை போடமுடியாத அளவுக்கு மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபரில் தொடங்கும் ழுனுஐ உலகக் கோப்பைக்கான முன்னோடியாக 50 ஓவர் போட்டியின் இறுதி அரையிறுதிப் போட்டியாகும்.
அரசியல் பதட்டங்கள் காரணமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய இந்தியா மறுத்ததை அடுத்து பாகிஸ்தானும் இலங்கையும் இணைந்து நடத்தும் பிராந்திய போட்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மாவின் தலைமையிலான இந்திய அணி, இரண்டு சூப்பர் 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.