ஹபராதுவ, தல்பேயில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில் வைத்து ரஷ்ய பிரஜை ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய 4 ரஷ்ய பிரஜைகளை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்த 39 வயதான ரஷ்ய பிரஜை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் ரஷ்ய பிரஜைகள் நால்வரும், தாக்கப்பட்ட ரஷ்ய பிரஜையும் இலங்கை நாணயத்துக்கு ரஷ்ய ரூபிள் பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பணப்பரிவர்த்தனையின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவரிடமிருந்த 3,800,000 ரூபாவை அபகரித்துச் சென்றதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் கூறப்படுகிறது.