ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று இரவு 08.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி, இரவு 08.00 மணி முதல் 09.30 மணி வரை நாட்டின் எந்தப் பகுதிக்கும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு 09.30 மணிக்கு பின்னர் சில பகுதிகளில் மின் வெட்டு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினமும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.