நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்குள் நுழைபவர்களை சோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்துள்ளார்.