பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இலங்கை நாட்டின் நெருக்கடி நிலை குறித்து வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ளார்.
கடன் வழங்குபவர்களை சம்மதிக்க வைப்பதில் இலங்கை அரசாங்கம் சிரமப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இதன்போது அவர் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த நிகழ்வுகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்ததுடன் தற்போதைய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திடீர் வரி குறைப்பு பண வீக்க அழுத்தத்தை உருவாக்கியதாகவும் ம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசாங்க செலவினங்களில் பெரும்பாலானவை புதிய பணத்தை அச்சிடுவதன் மூலம் நிதியளிக்கப்பட்டதாகவும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இரசாயன உரத்திலிருந்து கரிம உரத்திற்கு மாறிய செயற்பாடு தேயிலை மற்றும் பிற ஏற்றுமதி பயிர்களை ஆழமாக பாதித்ததாக தெரிவித்த அவர், கொரோனா தொற்று இலங்கையை தாக்கியவுடன் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள தனால் தான் மற்ற நாடுகளை விட இலங்கை அதிகளவாக பாதிக்கபட்டதாகவும் அர்ஜுன் மகேந்திரன் கூறியுள்ளார்.