நாட்டின் அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொவிட்-19 ஒழிப்பு செயலணியின் பரிந்துரைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ள்து.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார வழிகாட்டுதல்கள் கிடைத்தவுடன் உடனடியாக தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிக்க தயாராக உள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.