நாடாளுமன்ற வளாக வீதிகளின் ஊடக பயணிக்கும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் பயணிக்கும் வேகம் தொடர்பில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோ மீற்றருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்க வேண்டுமென நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளார்.
தியவன்னாவ ஈரநிலப் பகுதியில் வாழும் பறவைகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களும் ஏற்படும் பாதிப்பினை தவிர்க்கும் வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வீதிகளில் சில வாகனங்கள் அதிவேகமாக பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.