நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தனது மகனின் திருமணம் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மகன் ஆயேஷ் அபேகுணவர்தனவின் திருமண நிகழ்வு பெரும் பொருட்செலவில் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் வெளியான படங்கள்
மணமகனும், மணமகளும் ஹெலிகொப்டரில் வந்துள்ளதாகவும் அவர்களுக்கு முன்னதாக சொகுசு வாகனங்கள் சென்றுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் படங்களும் காணொளிகளும் வெளியாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இருபது வயதாகும் தனது மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் அவர் இன்னும் சட்டக்கல்லூரியில் சட்டம் படிக்கும் சட்டக்கல்லூரி மாணவராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன் மீதான இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்து சட்டத்துறைகளிலும் புகார் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.