நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதால் வெற்றிடமான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மானை நியமிக்க கட்சி தீர்மானித்தது.
அதேசயம் டயானா கமகேவிடம் இருந்து வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவிக்கு பொருத்தமான பெண் ஒருவரை நியமிக்குமாறு இலங்கை மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.