லாப் சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று திங்கட்கிழமை (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 625 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 4,115 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 248 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும். அதேவேளை நேற்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.