மட்டக்களப்பு வாழைச்சேனை – நாசிவன்தீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் இன்று சனிக்கிழமை (13) காலை 7.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நண்பர்களுடன் நீராடச் சென்ற வாழைச்சேனை கோழிக்கடை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.
நேற்று (12) கல்குடா சுழியோடிகள் தேடுதல் மேற்கொண்ட போதும் இளைஞன் மீட்கப்படாத நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.