நண்பர்களுடன் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி பூஸா கடலில் நீராடச் சென்ற போது நேற்று மாலை இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 வயதுடைய இம் மாணவன் நண்பர்கள் குழுவுடன் நீராடிக் கொண்டிருந்த போது குறித்த மாணவன் அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிர் காப்பு குழுவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மாணவனை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.