தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடனமைப்பாளராக இருந்தவர் சிவசங்கர், அஜித்தின் வரலாறு“, நடிகர் தனுஷின் “திருடா திருடி“ உள்ளிட்ட 800 படங்களுக்கு மேல் இவர் பணியாற்றி இருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருடைய சிகிச்சைக்கு பணம் இல்லாததால் சினிமா பிரபலங்கள் உதவுமாறும் அவருடைய மகன் அஜய் கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து நடிகர் சோனு சூட் சிவசங்கர் மாஸ்டருக்கு உதவிசெய்வதாக உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் சிவசங்கர் மாஸ்டருக்கு உதவ முன்வந்துள்ளதாகவும், இதற்காக அவர் பெரிய தொகையை மருத்துவ செல்விற்காக கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.