முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் நடிகை த்ரிஷா.
சினிமாவுக்குள் நுழைந்ததிலிருந்து தற்போது வரையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரது அழகும் நடிப்பும் இன்னும் இவரை உயரத்துக்கு கொண்டு சென்றது. அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் பாகம் 2 க்கான விளம்பரப்படுத்தல் பணியில் த்ரிஷா பிசியாக இருக்கிறார்.
இந்தத் திரைப்படம் இந்த மாதம் 28ஆம் திகதி திரைக்கு வருகிறது.
அதுமாத்திரமின்றி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் த்ரிஷா நடிக்கின்றார். 14 ஆண்டுகளுக்குப் பின்பு நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறு பிசியான நடிகையான த்ரிஷாவுக்கு டாட்டூஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இவர் நெமோ என்னும் மீனை டாட்டூவாக தனது நெஞ்சில் குத்தியுள்ளார். பின்பு தனது ராசியின் சின்னத்தை கையில் டாட்டூவாக குத்தியுள்ளார்.
ஆனால், தற்போது அவர் குத்தியிருக்கும் டாட்டூவானது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதாவது, தனது முதுகில் சினிமா கேமரா மற்றும் க்ளாப் போர்ட் என்பவற்றை டாட்டூவாக குத்தியுள்ளார்.
இது அவருக்கு சினிமா மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்பட புரமோஷனின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் த்ரிஷாவின் புதிய டாட்டூவைப் பார்த்தவர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.