தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு மாதத்திக்கு மேல் மாதாந்த நீர்ப் பாவனை கட்டண நிலுவையை செலுத்தாத நீர்ப் பாவனையாளர்கள் நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் யூ.கே.எம். முஸாஜித் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் தங்களது நீர் கட்டண பட்டியல் நிலுவை தொகையை இம் மாதம் 26ம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும்.
இப்பிரதேசங்களில் உள்ள நீர்ப்பாவனையாளர்களின் நிலுவைத் தொகை மற்றும் பாவனையின் அளவு போன்றவற்றைக் கருத்திற்கொண்டே இணைப்பு துண்டிக்கப்படவுள்ளது.
குறிப்பிட்ட தொகை நிலுவையை செலுத்தாமல் உள்ள வாடிக்கையாளர்கள் தமது நீர்க்கட்டணத்தைச் செலுத்தி, அசௌகரியங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நீர் துண்டிப்பு செய்யப்படும் வாடிக்கையாளர் நீர்க்கட்டண பட்டியல் தொகையுடன் தண்டப்பணத்தையும் முழுமையாக செலுத்திய பின்னரே மீளிணைப்பு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.