மாத்தறை, தெவுந்தர கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் இருபடகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த இரு படகுகளும் காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் இணைந்தே குறித்த படகுகளுடன் போதைப்பொருள் தொகையை கைப்பற்றியுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஹெரோயின் ரகத்தை சேர்ந்தது என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.
தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினரும் பொலிஸாரும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.