மொரட்டுவை – முராவத்தை ரயில் கடவைக்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 9 வயது சிறுவன் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரட்டுவை க்ளோவியஸ் மாவத்தையை சேர்ந்த நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் குழந்தையே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளது.
கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த தொடருந்து நகர்ந்து கொண்டிருந்த போது, குறித்த சிறுவன் தனது துவிச்சக்கரவண்டியினை தண்டவாளத்தின் ஊடாக செலுத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் ரயிலில் மோதியதில், சுமார் 13 மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.