முகத்துக்கு பூசம் கிரீம் மூலம் அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தரம் 08 இல் கல்வி கற்கும் 13 வயதாகிய அச் சிறுமி தூக்கில் தொங்கி தன்னுயிரை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தலவாக்கலை ட்றூப் தோட்டத்தில் நேற்று (05) மாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருவருக்கும் இடையே இடம் பெற்ற வாக்குவாதம்
போயா தினமாகிய நேற்று அண்ணன் தங்கை மற்றும் பாட்டியுடன் ஆகிய மூவரும் ஆலயத்திற்கு செல்ல தயாராகும் போது அண்ணன் பயன்படுத்தும் கிரீமை தங்கை பயன்படுத்தியுள்ளார்.
இதன் போது அண்ணன் தங்கையிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பாட்டியுடன் குறித்த மாணவன் ஆலயத்திற்கு செல்லும் போது தனது தங்கையையும் அழைத்த போது ஆலய வழிபாட்டில் கலந்து கொள்ள வருவதற்கு மறுத்துள்ளார்.
இதை அடுத்து பாட்டியும் மாணவனும் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை முடித்து கொண்ட ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதானத்தினை தங்கைக்கும் எடுத்துகொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அயலவர்கள் சகோதரி இறந்துள்ளதாக தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இளைஞன் மற்றும் பாட்டியும் வீட்டுக்கு வந்த பார்த்த போது தனது தங்கை உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
அண்ணனின் வாக்குமூலம்
இது தொடர்பாக தலவாகலை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் போது எனது தங்கையிடம் அன்பாக இதனை கூறியதாகவும் இவ்வாறு செய்து கொள்ளுவார் என தனக்கு தெரியாது எனவும் எப்போதும் பேசுவது போல் பேசியதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
இறந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியின் தாய் தந்தை கொழும்பில் தொழில் புரிவதாகவும் மாணவியும் தனது சகோதரரும் பாட்டின் அரவணைப்பிலேயே இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.