தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவிக் காணொளி தயாரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் இருப்பினும் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகின்றது.
அவர் இன்னும் உயிருடன் இருப்பதைக் குறிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்று எதிர்வரும் நவம்பர் (27.11.2023) ஆம் திகதி வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
புலிகளின் மற்றொரு மலிவான முயற்சி என்பதனால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக தேவைப்பட்டால், அதற்கேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.