கொலை மற்றும் பல குற்றச் செயல்களை செய்து தலைமறைவாகயிருந்த பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இரண்டு இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை (12) 05.10 மணியளவில் துபாயிலிருந்து UL – 226 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கொழும்பு, நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான களுத்துறை தினேஷ் சமந்த டி சில்வா என அழைக்கப்படும் “பபி” மற்றும் மட்டக்குளி சமித்புர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான திமுத்து சதுரங்க பெரேரா ஆகியோரே இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் திமுத்து சதுரங்க என்பவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடமும், தினேஷ் சமந்த என்பவரை கொழும்பு நாராஹென்பிட்டியில் உள்ள குற்றப் புலனாய்வு பிரிவின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.