திறந்தவெளிச் சிறைசாலைக் கைதிகள் இரண்டு பேர் தப்பி சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எம்பிலிப்பிடிய கதுருகசார திறந்த வெளிச் சிறையிலிருந்தே அந்த இரண்டு கைதிகளும் தப்பியதாக தெரியவந்துள்ளது.
இதில் முதலாவதாக மாத்தறை நீதிமன்றத்தில் திருடியதற்காக சிறைத்தண்டனை பெற்ற 28 வயதுடைய நபரென்றும். மற்றொருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய நபரென்றும் தெரியவந்துள்ளது.
தப்பி சென்ற கைதிகளை மீட்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.