இந்தியாவில் திருமணமான சிறிது நேரத்தில் மணப்பெண் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலத்தின் டெண்டலு கிராமத்தை சேர்ந்தவர் பிஷிகேசன் பிரதன். இவருக்கும் குப்தேஷ்வரி என்ற பெண்ணுக்கும் நேற்று முன் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த பின்னர் கணவர் வீட்டுக்கு கிளம்ப குப்தேஷ்வரி தயாராகி கொண்டிருந்தார்.பெற்றோரை பிரிந்து செல்கிற கவலையில் அவர் தொடர்ந்து அழுதபடி இருந்தார். குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அவரை தேற்ற முயன்றும் முடியவில்லை.
இதையடுத்து திடீரென குப்தேஷ்வரி தரையில் சுருண்டு விழுந்தார்.இதனால் அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
அங்கு குப்தேஷ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள் கடுமையான மாரடைப்பால் அவர் இறந்துவிட்டார் என கூறினார்.இதை தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.இதனிடையில் பிரதன் – குப்தேஷ்வரி திருமணம் செய்து கொண்ட வீடியோ வெளியாகி பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.