திருமண சேவை வழங்குநர் சங்கம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையில். அனைவரும் பேசியதாவது,
கொரோனா பரவலின் தாக்கம் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கத்தால் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தக் கலந்துரையாடல் ஏற்பட்டப்படு செய்யப்பட்டுள்ளது .
இந்த நிலையில் தற்போது சட்டகட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் திருமண வைபவங்களுக்கு அனுமதி கோரிக்கைகையை முன் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்ச எண்ணிக்கையிலான விருந்தினர்களைக் கொண்டு திருமண வைபவத்தை நடத்த இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்ததையடுத்து, அரசு வைத்திய அதிகாரிகள் இதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, நடக்கப்படவுள்ள திருமண வைபவங்கள் மதுபான உபசாரமின்றி நடத்தவும்,தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றவர்கள் மட்டுமே திருமண வைபவத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார வழிகாட்டல் ஒன்றை தயார் செய்யவும் அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர திருமண சேவை வழங்குநர்களின் சங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த கோரிக்கை, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய பணிக்குழுவுக்கு அனுப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.