திருகோணமலையில் ரயில் மோதி பலத்த காயங்களுக்குள்ளான நபரொருவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்றைய தினம் (25-04-2023) கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முற்பட்ட போதே புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய அமில பிரசாத் கருனாரத்ன ஒருவரே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இருந்து திருகோணமலைக்குச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டே விபத்திற்குள்ளாகியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் போது மோட்டார் சைக்கிள் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.