பேய் பிடித்த குடும்ப பெண்ணை, குணப்படுத்துவதாக கூறிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்ற சிங்க மந்திரவாதி ஒருவர், அந்த பெண்ணின் 14 வயதான மகளை பலமுறை பலியால் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, 4 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட குறித்த மந்திரவாதிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலாலே செவ்வாய்க்கிழமை (05) 60 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சட்டமா அதிபரால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிங்கள மந்திரவாதியான அநுர திசா வெல்கம 3 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, அவருக்கு தனித்தனியாக 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் ரூ. 60,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.
பேய் பிடித்ததாக கூறப்படும் பெண்ணின் வீட்டிற்கு வந்து, ஒரு அறையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். அந்த அறையில் குறிப்பிட்ட நேரம், நோய்வாய்ப்பட்ட பெண் உட்கார வேண்டுமென மந்திரவாதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சமயத்தில் மந்திரவாதி அறையிலிருந்து வெளியே வந்து, மற்றொரு அறைக்குள் வைத்து, நோய்வாய்ப்பட்ட பெண்ணின் 14 வயதான மகளை மிரட்டி பாலுறவு கொண்டுள்ளார்.
தாயாரை காப்பாற்றும் சிகிச்சைக்காக தாம் உடலுறவு கொள்ள வேண்டும், தாயாரை பிடித்த பேயை திருப்திப்படுத்த தன்னுடன் உடலுறவு கொள்ள வேணடுமென்று கூறி உடலுறவு கொண்டுள்ளதுடன், இந்த சம்பவத்தை மற்றவர்களிடம் சொன்னால், தாயார் இறந்து விடுவார் எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக குறித்த சிங்கள மந்திரமாதி சிறுமியை பல முறை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இதேவேளை, 1.1.2013 முதல் 2013.11.30 வரை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், சட்டமா அதிபர் இந்த வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை (05) வழங்கப்பட்டது.
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதிட்ட சட்டத்தரணி, குற்றம் செய்தவர் 27 வயது திருமணமாகாத இளைஞராக இருந்த போது குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அவருக்கு இப்போது 38 வயதாகிறது.
அவரது வயதான தாயை கவனித்துக் கொள்ள வேண்டியவர் என்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கோரினார்.
இருப்பினும், இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, ஒவ்வொரு குற்றத்துக்கும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வீதம், 60 வருட சிறை தண்டனை விதித்தார். அதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றத்தினால் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட யுவதிக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட மாட்டாது என உயர் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலாலே சுட்டிக்காட்டினார்.