இன்று அதிகாலை மர்ம நபர்களால் துப்பாக்கி, கற்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட பிரபல ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிர மவின் வீட்டுக்கு மனோ கணேசன் உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், காவிந்த ஜயவர்தன, கயந்த கருணாதிலக மற்றும் ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஆகியோரே ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் பிலியந்தலை வீட்டுக் குச் சென்று சம்பவம் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.
இன்று அதிகாலை இனம் தெரியாத சிலர் , ஆயுதங்களுடன் நுழைந்தததுடன் வீட்டின்மீது கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வாயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரியின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் ஊடகவியலாளர் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.