வெயங்கொடயில் கத்தியால் தாக்கப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த நிலையில் வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுங்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வெயங்கொட கும்பலொலுவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பொலிஸ் இசைக்குழுவில் பணிபுரியும் மீரிகம இருபது ஏக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கான்ஸ்டபிளே நபரொருவரின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.