அமெரிக்க அதிபர் பிடனுக்கு மக்கள் கொடுத்து வந்த ஆதரவு வேகமாக சரிந்து வரும் நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபராக பதவி ஏற்றால் நன்றாக இருக்கும் என்று அமெரிக்கர்கள் சிலர் கருத தொடங்கி உள்ளனர்.
முக்கியமாக குடியரசு கட்சியை சேர்ந்த சிலரே கமலா ஹாரிஸ் பதவிக்கு வரலாம் என்று கருத தொடங்கி உள்ளனராம். இது தொடர்பாக மக்கள் கருத்து கணிப்பும் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் அதிபர்களுக்கான approval rating கருத்து கணிப்புகளை துல்லியமாக வெளியிடும் Rasmussen Reports அமைப்பு அதிபர் பிடனுக்கான மக்கள் ஆதரவு வெகுவாக சரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
ஆப்கான் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவருக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு வெகுவாக சரிந்துவிட்டதாக அந்த கணிப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதிபர் பிடனுக்கான மக்கள் ஆதரவு கடந்த கருத்து கணிப்பில் 53 ஆக இருந்தது. ஆனால் இந்த முறை அவருக்கான ஆதரவு 7 சதவிகிதம் குறைந்துள்ளது. அவருக்கு தற்போது மக்கள் ஆதரவு 46 சதவிகிதம் மட்டுமே உள்ளது.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதும். அங்கு தாலிபான்கள் வெற்றி பெற்றதும் இந்த ஆதரவு குறைய காரணமாக பார்க்கப்படுகிறது. 54 சதவிகிதம் பேர் பிடனுக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை பிடன் வெளியேற்றிய விதம் தவறானது. அவர் தவறு செய்துவிட்டார். அவர் வலிமையான அதிபராக செயல்படவில்லை என்று இவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். முக்கியமாக ஆப்கான் படைகள் வலிமையானது என்று பிடன் தவறாக கருத்து தெரிவித்துவிட்டார்.
அவர் தனது அரசியல் கணிப்பில் தோல்வி அடைந்துவிட்டார், உளவுத்துறையை சரியாக பயன்படுத்தவில்லை என்று கணிப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.
இதேவேளை துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு 43 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. அதிபர் பிடனை விட இவருக்கான ஆதரவு 3 சதவிகிதம் குறைவாக இருந்தாலும் தனிப்பட்ட வகையில் இவரை ஆதரிக்கும் மக்கள் சதவிகிதம் கடந்த சில மாதங்களாக உயர தொடங்கி உள்ளது.
முக்கியமாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபராக பதவி ஏற்றால் நன்றாக இருக்கும் என்று அமெரிக்கர்கள் சிலர் கருத தொடங்கி உள்ளனர்.