திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மீனவரின் வலையில் பெரிய குளத்து மீன் ஒன்று சிக்கியுள்ளது.
குறித்த மீனவர் நேற்றைய தினம் (12) மாலை கடலுக்கு சென்ற போது அவரின் வலையில் குளத்து மீனான கனையான் மீன் ஒன்று சிக்கியுள்ளது.
பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் கடல் நீருடன் குளத்து நீர் கலப்பு காரணமாகவும் வெள்ள நீரோட்டம் அதிகரிப்பு காரணமாக குளத்து மீன் கடலில் சிக்கியுள்ளதாக மீனவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மீன் சுமார் 15 கிலோ கிராம் எடை கொண்டதாகும். வலையில் சிக்கிய அதிக நிறையுடைய இந்த மீனை பிரதேசவாசிகள் பார்வையிட்டுள்ளனர்.